ஒரு தேசத்தின் இசை (Beats of One Nation)


ஏன் இசை எதையும் குணப்படுத்த வல்லது என்று நாங்கள் நம்புகிறோம்.
இலங்கையின் பல்வேறு சமூகங்களை ஒன்றிணைக்கும் திறன் இசைக்கு உண்டு. எங்கள் வருடாந்த மாநாட்டில் அனைத்து 25 மாவட்டங்களிலிருந்தும் 3500 க்கும் மேற்பட்ட மாணவ தலைவர்களை ஈடுபடுத்தியதில் எங்களின் ஒன்றுக்கூடுவோம் இலங்கை அமைப்பிற்கு பத்து வருட அனுபவம் உள்ளது.
எங்கள் மாநாட்டில் இசை மற்றும் கலைப் பிரிவின் விளைவாக, பல்வேறு பின்னணியிலான இளைஞர்கள் மற்றும் யுவதிகள் இன மத ரீதியில் தங்கள் முதல் நேர்மறையான அனுபவத்தைப் பெற்றிருக்கிறார்கள்.
நாடு முழுவதும் பரந்த பார்வையாளர்களை ஈடுபடுத்த நாங்கள் பார்க்கும்போது, பிரபல இசைக்கலைஞர்கள் மற்றும் மாறுபட்ட உள்ளூர் திறமைகளைக் கொண்ட BOON போன்ற முயற்சிகள் ஒரு புதிய பார்வையாளர்களை ஈர்க்கும், இது பொதுவாக ஒரு நல்லிணக்க நிகழ்வில் கலந்து கொள்ளாது எனினும் இதன் மூலம் வன்முறை தீவிரவாதத்தில் ஈடுபடுவதற்கான அதிக ஆபத்தில் இருக்கும் இளைஞர்களை அடையக்கூடிய திறனை நமக்குத் தருகிறது.
இலங்கை போன்ற வளரும் நாடுகளில், பெற்றோர்கள் முக்கியமாக கல்வியியல் மற்றும் வர்த்தகம், அறிவியல், மருத்துவம் மற்றும் சட்டம் போன்ற பாரம்பரிய தேர்வுகளிலிருந்து ஒரு வாழ்க்கையை வடிவமைப்பதை வலியுறுத்துகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இசை மற்றும் கலைகள் போன்ற விடயங்களை பெரும்பாலும் தொடர விரும்புவதில்லை. கலைகளில் ஒரு தொழில் சாத்தியத்தை அனுபவிக்க அவர்களுக்கு உதவும் ஒரு முயற்சி சமூகத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்.