திங்க் (Think) பிரச்சாரம்

திங்க் (Think) பிரச்சாரம்

சமூக ஊடகங்களிலும் பொது சொற்பொழிவிலும் வெறுக்கத்தக்க பேச்சின் தாக்கத்தை எதிர்கொள்வதை திங்க் பிரச்சாரம் நோக்கமாகக் கொண்டுள்ளது. சமூகங்களின் எதிர்மறையான கதைகள், பொய்யான குற்றச்சாட்டுகள் மற்றும் பல்வேறு சமூகங்களின் தவறான விளக்கங்கள் இளைஞர்களை மூளைச் சலவை செய்தல், வன்முறையைத் தூண்டுதல் மற்றும் வகுப்புவாதத்தை ஏற்படுத்துவதை எதிர்ப்பதனை பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஒன்றுக்கூடுவோம் இலங்கை அமைப்பானது தவறான சொல்லாட்சி மற்றும் பிரச்சாரங்களை அம்பலப்படுத்துவதன் மூலம் ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறது, அதே நேரத்தில் இளைஞர்களை வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் எதிர்மறையான கதைகள் என்பவற்றை உள்வாங்கிக் கொள்ளும் முன் இளைஞர்களை “சிந்திக்க” வலியுறுத்துகிறது. கூடுதலாக, THINK பிரச்சாரம் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களுடன் உரையாட பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களுடன் உரையாடுவதற்கும் உடனடி கவலைகளைத் தீர்ப்பதற்கும் ஒரு பாதுகாப்பான தளத்தை வழங்குகிறது.